எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க மறுத்த ஐகோர்ட்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.
சென்னை ஐகோர்ட்
சென்னை ஐகோர்ட்
Published on: 
Summary

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

தேர்தல் வழக்கு

கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து, தொகுதியில் போட்டியிட்ட மிலானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, உதயநிதி தரப்பில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, 45 நாட்கள் அவகாசத்துக்குள் இந்த தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

டிச. 11-ல் விசாரணை

தேர்தல் வழக்கு தாக்கல் செய்த மிலானி தரப்பில், தேர்தல் வழக்கு குறித்த காலக்கெடுவுக்குள் தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற பதிவுத்துறை அதை ஏற்று எண்ணிட்டுள்ளதால், வழக்கில் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனு மீது இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.அருள்முருகன், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பிரதான தேர்தல் வழக்கின் விசாரணையை டிசம்பர் 11-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

X