நாளை மறுநாள் சென்னையில் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

சென்னையில் இருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே சுமார் 860 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது அக்வான் புயல்.
heavy rain
Published on: 

அக்வான் புயல் காரணமாக சென்னையில் 17 ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தீவிர புயலாக மாறும் அக்வான்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையில் இருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே சுமார் 860 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது அக்வான் புயல். இது நவம்பர் 17. தீவிர புயலாக மாறுகிறது

நவ.18 மற்றும் 19இல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் இம்மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

நவம்பர் 19 ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது அதன்படி காஞ்சிபுரம், ராணிப்பேட்டை திருவண்ணாமலை,விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

நவ.20 தேதி மழைக்கு வாய்ப்பு

நவம்பர் 20ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

X