ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது: நவம்பர் 17-ல் தீவிரப் புயலாக மாறுகிறது அக்வான் புயல்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையில் இருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே சுமார் 860 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
Meteorological Centre
Published on: 
Summary

அக்வான் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது நாளை புயலாக வலுபெற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வட மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை நவம்பர் 16-ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு நகரும் இந்த புயல், நவம்பர் 17-ஆம் தேதியன்று தீவிரப் புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையில் இருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே சுமார் 860 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் நகர்வு மற்றும் தீவிரமடையும் தன்மையை வானிலை மைய அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். புயல் கரையை நெருங்கும் திசை மற்றும் வேகம் குறித்த அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகளை பொதுமக்கள் உன்னிப்பாகக் கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

X