கனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
Published on: 
Summary

கனமழையால் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று விடுமுறை

கனமழை காரணமாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 22) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

வானிலை மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அலர்ட்

இதன் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திருச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை

தென் மாவட்டங்களில் பல இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வரும் சூழலில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நிலச்சரிவு

மறுபுறம் கன்னியாகுமரி - கேரளா எல்லை பகுதியில் உள்ள நெய்யாற்றின்கரை - பாறசாலை இடையே ரெயில் பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் ரெயில்கள் தாமதமாககியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com