அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 பயிர்க்கடன் தள்ளுபடி- அரசாணை வெளியீடு

01.05.2025 முதல் 31.03.2026 வரை வழங்கப்பட்ட தகுதியான பயிர்க்கடன்கள் அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் தள்ளுபடிப் பலனைப் பெறும்.
அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 பயிர்க்கடன் தள்ளுபடி- அரசாணை வெளியீடு
Published on: 
Summary

தமிழ்நாடு அரசு, ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்து, 01.05.2025 முதல் 31.03.2026 வரை வழங்கப்பட்ட தகுதியான கடன்களுக்கு தள்ளுபடி வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.9,062.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் அனைவருக்கும் பாகுபாடின்றி ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் செய்துள்ளது.

தள்ளுபடி பெறுவதற்கான பயிர்க்கடன்களின் காலவரையறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 01.05.2025 முதல் 31.03.2026 வரை வழங்கப்பட்ட தகுதியான பயிர்க்கடன்கள் அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் தள்ளுபடிப் பலனைப் பெறும்.

இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தவும், கூட்டுறவு வங்கிகளுக்கு ஏற்படும் நிதிப் பொறுப்பை ஈடுகட்டவும் ஒட்டுமொத்தமாக ரூ.9,062.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

X