

சென்னை வேளச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் அசன் மவுலானா. இவர் அந்த தேர்தலில் செய்த செலவு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கணக்கு காட்டினார். அதில் அவர் முறையாக கணக்கு காட்டவில்லை என புகார் எழுந்துள்ளது.
அதாவது ரூ. 37 லட்சம் தேர்தலுக்கு செலவு செய்த நிலையில் 17.03 லட்சம் மட்டுமே செலவிட்டதாக கணக்கு காட்டினாராம். இதை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்துவிட்டது. நாளிதழ்களில் வெளியான விளம்பரச் செலவுகளை காங்கிரஸ் கமிட்டி ஏற்றதாக கூறி கணக்கு காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.