பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான் - மாணிக்கம் தாகூர்

தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் குறித்து முடிவு செய்யப்படும்.
Manickam tagore
Published on

பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதம் முடிந்து போன கதை: பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி தான் என்பதை தவிர சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

பிரதமர் வேட்பாளர் விஜய் என அமைச்சர்கள் கூறி வரும் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தவெக தோழமை கட்சி கூட்டத்துக்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்த நிலையில், சென்னையில் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது;

முதலமைச்சர் தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்.

வரும் 9-ந்தேதி கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டத்தில் தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் குறித்து முடிவு செய்யப்படும்.

பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதம் முடிந்துபோன கதை. முடிந்துபோன விஷயத்தை மீண்டும் மீண்டும் பேச வேண்டாம். ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதை தவிர, சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.”

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com