இடைத்தேர்தலில் அதிகார பலத்தாலும் பண பலத்தாலும் தவெக வெற்றி - எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.
Edappadi Palaniswami
Published on: 
Summary

இடைத்தேர்தல் தொகுதியில் டிபன்பாக்ஸில் பணம் கொடுத்தார்கள் என கம்யூனிஸ்ட் கட்சியினரே குற்றம்சாட்டினர் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* கடந்த தேர்தலைவிட தாராபுரம் தொகுதியில் தவெக குறைந்த வாக்குதான் பெற்றுள்ளது.

* முதலமைச்சர் விஜயே வந்து பிரசாரம் செய்தபோதும் பெரியளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை தவெக.

* இடைத்தேர்தலில் கூட்டணி அமைத்து 10,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தவெக வெற்றி பெற்றுள்ளது.

* தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்த இடசாரிகளே அவர்களை எதிர்த்து போட்டியிட்டனர்.

* இடைத்தேர்தல் தொகுதியில் டிபன்பாக்ஸில் பணம் கொடுத்தார்கள் என கம்யூனிஸ்ட் கட்சியினரே குற்றம்சாட்டினர்.

* இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் அதிகார பலத்தாலும் பண பலத்தாலும் தவெக வெற்றி.

* தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

* விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குற்றம்சாட்டுகிறது என உணவுத்துறை அமைச்சர் கூறுகிறார்.

* எண்ணெய், அரிசி, புளி, காய்கறி என அனைத்து விலையும் கடுமையாக உயர்ந்த நிலையில் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com