

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, இது அரசின் அராஜகப் போக்கை வெளிப்படுத்துகிறது என கூறினார். தேர்தல் நேரத்தில் அரசின் வன்மத்தைக் காட்டும் நடவடிக்கை என்று தெரிவித்தார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா அவர்களை இன்றைய தவெக அரசு அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தேர்தல் நேரத்தில் போடப்படும் வழக்குகளை எல்லாம் காட்டி, தங்களின் வன்மத்தை தீர்த்துக் கொள்ள இன்றைய வன்ம குடோன் ஆட்சியாளர்கள் இப்படிப்பட்ட பாசிசப் போக்கை கையாள்வது வெட்கக்கேடானது.
ஒரு அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை கைது செய்ததன் மூலம், நாங்கள் எப்போதும் இவர்களைப் பார்த்து சொல்லக் கூடிய “Narcissistic Behaviour”- அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளது விஜய் தலைமையிலான ஆச்சரியக்குறி அரசு.
“ஒருவேளை உங்கள் Convoy செல்லும் போது மக்கள் யாராவது மனு கொடுக்க வந்தால், வண்டியை நிறுத்தி மனுவை வாங்குவீர்களா? அல்லது, உங்கள் கான்வாய்-க்கு குறுக்கே வந்தார்கள் என்று வழக்கு பதிந்து கைது செய்வீர்களா?” என்ற சந்தேகம் இப்படிப்பட்ட கைதுகளால் தமிழக மக்களுக்கு எழுந்துள்ளது.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கார்த்திகா உள்ளிட்ட அக்கட்சியினர் மீதான கைது நடவடிக்கையினை கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.