டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி?

ஜனாதிபதி திரவுபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி?
Published on

சென்னை:

எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக மூத்த நிர்வாகிகளும் டெல்லி செல்ல உள்ளனர்.

இந்நிலையில் சேலத்தில் இன்று மாலை உள்ள தனது இல்லத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com