தொகுதி மறுவரையறை மசோதா மறுபரிசீலனை? :உதயநிதி ஸ்டாலின் பதில்

திராவிட முன்னேற்ற கழகம் எந்த விதத்திலும் தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக்கொடுக்காது.
Udhayanidhi Stalin
Published on: 
Summary

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான கேள்விகளுக்கு பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று பதிலளித்தார்.

சென்னையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

திராவிட முன்னேற்ற கழகம் எந்த விதத்திலும் தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக்கொடுக்காது.

தொகுதி மறுவரையறை மசோதாவை மறுபரிசீலினை செய்வது குறித்து, எங்கள் கட்சியின் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான சரியான விளக்கங்களை எங்கள் கட்சியை சேர்ந்த ஆர். ராசா, கனிமொழி மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் அளித்துள்ளனர்.

தமிழகத்தின் மாநில உரிமைகளை விட்டுக்கொடுப்பது தொடர்பாக சரியான நேரத்தில், திமுக சரியான முடிவை எடுக்கும்.

இந்தியாவில் முதன் முதலாக தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவிற்கு, திமுக தான் எதிர்ப்பு தெரிவித்தது” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில் இண்டியா கூட்டணியை சேர்ந்த கட்சி தலைவர்கள் இன்று சென்னைக்கு வருகை தந்து, திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளனர்.

இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, தொகுதி மறுவரையறை தொடர்பான விவகாரம் குறித்து எங்கள் கட்சி தலைவர் முடிவெடுப்பார் என கூறினார்.

X