முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு தி.மு.க. ஆதரவு

தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நகலை எரித்து திமுக தனது எதிர்ப்பை பதிவு செய்தது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை நடத்தக்கூடாது.
சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
Published on

7.18 விகிதாச்சாரத்தை குறைக்கக்கூடாது எனக்கூறி த.வெ.க. அரசு கொண்டு வந்த தனித்தீர்மானத்தை தி.மு.க. ஆதரிக்கிறது.

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எக்காரணத்தை கொண்டும் தமிழகம் பாதிக்கப்படக் கூடாது என்பதே தி.மு.க. நிலைப்பாடு. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்தால் என்ன பாதிப்பு என நாட்டுக்கே முதலில் கூறியது தி.மு.க. தான்.

எம்பிக்கள் எண்ணிக்கை குறைக்க அனுமதிக்க மாட்டோம், தமிழகத்தின் விகிதாச்சாரம் குறையக்கூடாது என இதே சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். திமுக அமைச்சரவை கூட்டம் நடத்திய பின்னர் கடந்தாண்டு மார்ச்சில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. Fair Delimitation தலைப்பில் 5 மாநில முதல்வர்கள், 10 கட்சிகளுக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுத்தார் மு.க.ஸ்டாலின். தி.மு.க.வின் எதிர்ப்பால் தான் தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்ப்பட்டது.

2026 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை குறையும். ஏப்.16-ல் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நகலை எரித்து திமுக தனது எதிர்ப்பை பதிவு செய்தது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை நடத்தக்கூடாது. 7.18 விகிதாச்சாரத்தை குறைக்கக்கூடாது எனக்கூறி த.வெ.க. அரசு கொண்டு வந்த தனித்தீர்மானத்தை தி.மு.க. ஆதரிக்கிறது.

மேலும், 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை முழுமனதுடன் திமுக ஆதரிக்கிறது வரவேற்கிறது என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com