தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானம்: வி.சி.க., ஐயூஎம்எல் ஆதரவு

தமிழ்நாட்டின் உரிமையை, தென்னிந்தியாவின் உரிமையை பாதுகாக்கும் வகையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் வன்னி அரசு- ஷாஜகான்
அமைச்சர்கள் வன்னி அரசு- ஷாஜகான்
Published on

தமிழ்நாடு சட்டசபையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து இந்திய முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்தது.

அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி போன்றோர் நாடாளுமன்றத்திற்குள் பேசுவது வேறு, வெளியே பேசுவதும் வேறு. பிரதமர் மோடியும், அமித்ஷாவுடம் 2 வித நாடகம் நடத்துவதை வெளிப்படுத்தும் விதமான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மகளிர் இடஒதுக்கீடுக்கு தடை இல்லாத போதும் தொகுதி மறுவரையறையுடன் இணைத்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டம். வடமாநிலத்தவருக்கு முக்கியத்துவம் கொடுத்து சமத்துவ நிலையை நீக்கும் வகையில் தொகுதி மறுவரையறை. இந்தி பேசும் மாநில எம்பிக்கள் எண்ணிக்கை உயரும். எனவே அவர்கள் மட்டுமே நாட்டை ஆளும் வாய்ப்பை பெறுவர். தொகுதி மறுவரையறை அனுமதிக்கக்கூடாது, அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு என்று தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து இந்திய முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக அமைச்சர் ஷாஜகான் கூறுகையில்,

தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு IUML ஆதரவு தெரிவிக்கிறது. மத்திய பாஜக அரசு கொண்டு வரம் சட்டங்களும், திட்டங்களும் மக்களுக்கு விரோதமானதாகவே உள்ளது. நாட்டு மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல் பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்ச்சியில் தொகுதி மறுவரையறை. பாஜக வெற்றிபெறவே முடியாத தென் மாநிலங்களின் குரலை நசுக்கும் வகையில் தொகுதி மறுவரையறை. பல ஆண்டுகளை கடந்த அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தொகுதி எம்பிக்கள் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்படாத நிலையிலும் வருமுன் காக்கும் நோக்கிலேயே முதலமைச்சர் தனித்தீர்மானம் நிறைவேற்றம்.

இவ்வாறு அமைச்சர் ஷாஜகான் பேசினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com