

முதலமைச்சர் குறித்து அநாகரிகமாக விமர்சித்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க பயமா? என்று பரந்தாமன் கேள்வி எழுப்பினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சட்டசபையில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி எழுப்பிய 15 கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதில் அளிக்கவில்லை.
* 13 எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பிய நிலையில் முதலமைச்சர் விஜய் பதில் அளிக்கவில்லை. முதலமைச்சர் பதில் அளிப்பதே மரபு.
* பெண்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்கள் கூட மிசாவில் கைது செய்யப்படுவர் என நிர்மல்குமார் கூறுகிறார்.
* மிசா பற்றி பேசுவதற்கு முதலமைச்சர் விஜய்க்கும் அமைச்சர் நிர்மல்குமாருக்கும் எந்த தகுதியும் இல்லை.
* மிசாவில் கைதானோர் தாக்குதலுக்கு உள்ளானது குறித்த இஸ்மாயில் கமிஷன் பற்றி தெரியுமா?
* மிசாவில் அரசியல் கைதிகள் கொடுமைக்குள்ளானது பற்றிய ஆணைய அறிக்கையில் தெளிவாக உள்ளது.
* முதலமைச்சர் குறித்து அநாகரிகமாக விமர்சித்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க பயமா?
* ஆதாரம் வேணும், ஆதாரம் வேணும்னு கேட்டீங்களே, போதுமா? நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன் என முதல்வர் வசனம் பேசுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.