

மிசா என்பது எல்லோருக்கும் தெரியும். மிசா கொடுமையை அனுபவித்தவர் எங்கள் தலைவர். அவர் ரியல் ஆட்சி நடத்தினார். ஆனால் இப்போது ரீல்ஸ் ஆட்சி நடக்கிறது. ரீல்ஸ் எடுப்பதற்காகவே நேற்று சினிமா பாணியில் பேசினார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, ‘காவல்துறை, சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எடுத்து வைத்தார். இந்த ஆட்சி பொறுப்புக்கு வந்த 116 நாட்களில் 550 குற்றங்கள் நடந்துள்ளன. அதில் 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் அத்துமீறல்கள், காவல் நிலைய மரணங்கள், ஆணவப்படுகொலைகள் நடந்துள்ளன என்று குறிப்பிட்டார். இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் அளிப்பார் என்றுதான் எதிர்பார்த்தோம்.
எனவேதான் நேற்று முதலமைச்சர் பேசும் போது, ‘27 நிமிடங்கள் வரை அமைதியாக கேட்டுக் கொண்டுதான் இருந்தோம். ஆனால் முதலமைச்சர் திட்டமிட்டு அவை விதிகளை மீறி அதாவது நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக விவாதிக்கக் கூடாது என்பது விதி. ஆனால் அதையும் மீறி அமலாக்கத்துறை தெரிவித்துள்ள தகவல்களை முழுமையாக படித்தார். இது சட்டசபை விதிகளை மீறிய செயல்.
மிசா பற்றி பேசும் போது அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதால் உடல் அசைவுகளை எல்லாம் செய்து காட்டினார். மிசா என்பது எல்லோருக்கும் தெரியும். மிசா கொடுமையை அனுபவித்தவர் எங்கள் தலைவர். அவர் ரியல் ஆட்சி நடத்தினார். ஆனால் இப்போது ரீல்ஸ் ஆட்சி நடக்கிறது. ரீல்ஸ் எடுப்பதற்காகவே நேற்று சினிமா பாணியில் பேசினார்.
சர்க்காரியா கமிஷன் பற்றி ஏற்கனவே பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு கலைஞரும் பல முறை பதில் அளித்து இருக்கிறார். இப்போது நாங்கள் பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டை பாக்கு பற்றி அவர் பேசுகிறார். 4 நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு தகவலையும் சொல்கிறேன். சபாநாயகர் இருக்கையில் சத்யபாமா எம்.எல்.ஏ.வை அமர வைத்ததும் இதுவரை எந்த பெண் எம்.எல்.ஏ.வும் அமர்ந்ததில்லை என்று ரீல்ஸ் போட்டார்கள். ஆனால் காங்கிரசை சேர்ந்த பொன்னம்மாள், யசோதா, கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த லீமாரோஸ் இப்படி பல பெண் தலைவர்கள் அந்த ஆசனத்தில் அமர்ந்த வரலாறு உண்டு என்பதை மறந்து விட்டார்கள்.
சர்க்காரியா கமிஷன் விசாரணையின் போது ஆஜரான எம்.ஜி.ஆரே தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கமிஷன் விசாரணை முடியும் போது 28 புகார்கள் கூறப்பட்டதாகவும், ஆனால் எதையும் நிரூபிக்க முடியவில்லை என்று அந்த வழக்கையே மூடிவிட்டார்.
அதே போல் முதலமைச்சர் நேற்றைய பேச்சின் போது முரசொலி மாறன் பற்றியும் பேசினார். முரசொலிமாறனை போற்றும் வகையில் தபால் தலை வெளியிட்ட போது அந்த குடும்பத்தினர் இன்றைய முதலமைச்சரையும் டெல்லிக்கு அழைத்து சென்றனர். முதலாளியாக இருந்து அந்த குடும்பம் சினிமாவில் நடிப்பதற்காக கொடுத்த பணத்தையும் பெற்றுக் கொண்டவர்தான்.
அப்படிப்பட்டவர் இன்று முரசொலிமாறனை கொச்சைப்படுத்தி பேச என்ன அவசியம் வந்தது. எனவேதான் நேற்று முதலமைச்சர் பேசியது தவறு. மிசாவை பற்றி குறிப்பிட்டது தவறு. சர்க்காரியா கமிஷன் பற்றி பேசியது தவறு. எனவே அந்த பேச்சுக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. நடுநிலை போல் செயல்பட்ட சபாநாயகர் இன்று சர்வாதிகாரத்தின் உச்சத்துக்கே சென்று எங்களை வெளியே தூக்கி போட்டு உள்ளார். ஜனநாயகத்தின் மரபுகள் கெட்டு போய் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.