முரசு புயல் அதிகாலை 4 மணிக்குள் கரையை கடக்கும்- வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மாலை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும்.
Meterological Director Durai
Published on: 

சென்னை நுங்கம்பாக்கத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் துரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மாலை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும்.

இன்று மாலை முதல் நாளை காலை வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். குறிப்பாக, வடதமிழக பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குச்செல்ல வேண்டாம்.

புயலில் தீவிரம் குறைவு

முரசு புயல் தீவிரம் குறைவாக உள்ளதால் பெரியளவில் அலை எழுவது இருக்காது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள முரசு புயல் நள்ளிரவு 11.30 மணிக்கு தொடங்கி அதிகாலை 4 மணிக்குள் கரையை கடக்கும்.

மத்திய மேற்கு வங்கக்கடலில் உள்ள புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர பகுதிகளில் கரையை கடக்கக்கூடும்.

ஆந்திர கடலோர பகுதியில் நல்லூர், நரசாப்பூர் இடையே ஓங்கோலுக்கு தெற்கே தீவிரபுயலாக நாளை அதிகாலைக்குள் கரையை கடக்கும்.

ஆந்திராவில் முரசு புயல் கரையை கடக்கும்போது 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.

நாளை காலை வரை

புயல் கரையை கடந்த பிறகு, நாளை காலை 8.30 மணி வரை சென்னை, திருவள்ளூர் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நவம்பர், டிசம்பரில் உருவாகும் புயல்கள் பொதுவாக தமிழகத்தை தாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X