கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு,திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடமான உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றப்பதாக அக்கட்சியின் தலைவர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஒருமுறை மட்டும் மலை உச்சியில் உள்ள பழமையான கல் தூணில் (தீபத்தூண்) தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது; அதைச் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும் செயல்படுத்துமாறு உத்தரவிட்டது. இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு,திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடமான உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது
கடும் அழுத்தங்களுக்கும் நிர்ப்பந்தங்களுக்கும் அடிபணியாமல் மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில் கு.வெ.க அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைக்கு சிபிஎம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
இது குறித்து சிபிஎம் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
உண்மையான பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மரபுகளையும், பாரம்பரியத்தையும் பின்பற்றும் வகையிலும், பல்வேறு முனைகளிலிருந்து கொடுக்கப்பட்ட கடும் அழுத்தங்களுக்கும் நிர்ப்பந்தங்களுக்கும் அடிபணியாமல் மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில் த.வெ.க அரசு எடுத்த உறுதியான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.
சங்பரிவாரத்தின் ஆத்திரமூட்டலுக்கும் திசைதிருப்பல்களுக்கும் இரையாகாமல் வழக்கம்போல் மக்கள் திருக்கார்த்திகை விழாவை கொண்டாடியுள்ளனர். கடந்த ஆண்டு திருக்கார்த்திகை விழாவின் போது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்திய உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த ஆண்டும் அதேபாணியில் தேவையில்லாமல் இப்பிரச்சனையில் தலையிட்டது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்டிக்காட்ட விரும்புகிறது
இது வரம்புமீறி உள்நோக்கத்துடன் செயல்படும் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகமாகும்மதவெறி சக்திகளின் சதி செயல்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பது மீண்டும் ஒருமுறை அழுத்தமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
என்று குறிப்பிட்டுள்ளது.