திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தவறான தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதை வரவேற்கிறோம் என சிபிஎம் மாநில தலைவர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்த உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு 2026 ஜனவரி 6 அன்று உறுதி செய்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பஞ்சோலி அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சில கருத்துகளுக்குத் தடை விதித்தது. எனினும், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு 2026 நவம்பர் 24 அன்று மட்டும் ஒருமுறை நிகழ்வாகதீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தது.
கோயில் நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே அங்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும், பொதுமக்கள் செல்லவோ, ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவோ அனுமதி இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேவைப்பட்டால் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்படலாம் எனவும், இந்தத் தற்காலிக ஏற்பாடு எதிர்காலத்தில் எந்தவொரு உரிமையாகவோ வழக்கமாகவோ கருதப்படாது எனவு நீதிமன்றம் தெளிவுப்படுத்தியிருந்தது
இந்த விவகாரம் அரசியலில் பல்வேறு கருத்துகளை உருவாக்கியுள்ளது.குறிப்பாக இடதுசாரிகள் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என வலிய்றுத்தியிருந்தனர், இந்த நிலையில் தமிழக நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீர்ர்ய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது .
இந்த நிலையில் தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்றக்கதக்க ஒன்று என சிபிஎம் மாநில தலைவர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலை தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தவறான தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதை வரவேற்கிறோம்.
மத வெறியர்களின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமல், உண்மையான பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கு அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் துணை நிற்க வேண்டும்.
என்று குறிப்பிட்டுள்ளார்.