தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்களுக்கும், காங்கிரசுக்கும் எந்த சம்பந்தம் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைதை பொறுத்தவரை தி.மு.க. அதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றுதான் சொல்லும்.
திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்
Published on: 
Summary

தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்களுக்கும், காங்கிரசுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான வாழப்பாடி ராமமூர்த்தியின் 24-வது நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவ படத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த காலத்தில் இல்லாத ஊழலற்ற ஆட்சியாக தமிழ்நாட்டில் தற்போது நிலவி வருகிறது. யார் மீது வழக்கு இருக்கிறதோ தவறு இருக்கிறதோ அவர்கள் கைது செய்யப்படுவார்கள். விலைவாசி உயர்வுக்கு மாநில அரசு மட்டும் காரணம் கிடையாது மத்திய அரசும் காரணம். ஆனால் மக்கள் வருமானம் அப்படியேதான் இருக்கிறது. மத்திய அரசு, மாநில அரசு இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்பில் மகேஷ்

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைதை பொறுத்தவரை தி.மு.க. அதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றுதான் சொல்லும். இந்த வழக்கை அவர் சட்டப்படி சந்திக்க வேண்டும். நாங்களும் கூட்டணியில்தானே இருந்தோம் என்கிறீர்கள். ஆனால் கூட்டணியில் இருந்தாலும் கடந்த ஆட்சியில் எங்களுக்கு ஆட்சியில் பங்கு கிடையாது. எங்களிடம் அமைச்சர்கள் ஆலோசனை கேட்கும் நிலையிலும் இருந்ததில்லை.

இந்தியா கூட்டணி

எனவே அப்போது என்ன தவறுகள் நடந்ததோ அதற்கும் காங்கிரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்களுக்கு எதுவும் தெரியாது. த.வெ.க., இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது. அதை ஏற்கனவே ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட போதிலும், போராட்டத்தில் பங்கேற்ற போதிலும் உறுதிப்படுத்தி இருக்கிறது. டெல்லியில் 1-ந்தேதி நடைபெறும் கூட்டத்திற்கு அவர்களும் அழைக்கப்பட்டு உள்ளார்களா என்பது எனக்கு தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் தணிகாசலம், துணை தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, அருள் பெத்தையா, எஸ்.ஏ.வாசு, எஸ்.சி.துறை செயல் தலைவர் பி.வி. தமிழ் செல்வன், கராத்தே ரவி, தாம்பரம் வி.ஆர். சிவராமன், ஏ.ஜி.சிதம்பரம், புத்தன், அகரம் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com