உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க வேண்டும்- தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார் முதலமைச்சர்

வருங்கால தலைமுறைக்கும் தமிழ் மொழியின் வளத்தையும் பெருமையையும் கொண்டு சேர்ப்பது நமது கடமை என முதலமைச்சர் விஜய் பேசினார்.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Published on
Summary

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்தார்.

தமிழ்நாடு சட்டசபையில் இன்றைய நிகழ்வில் முதலில் வினாக்கள்-விடை நேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்தார்.

அப்போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-

* தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பது நமக்கெல்லாம் கிடைத்த பெருமை.

* பல்லாயிரம் ஆண்டுகள் உயிர்ப்புடன் பேசப்படும் மொழி தமிழ் மொழி.

* வருங்கால தலைமுறைக்கும் தமிழ் மொழியின் வளத்தையும் பெருமையையும் கொண்டு சேர்ப்பது நமது கடமை.

* தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

* ஆளுநரால் அனுப்பப்படும் முன்மொழிவுகளுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

* மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக உள்ளது.

* தீர்ப்பு, தீர்ப்பாணை, உத்தரவுகளை தமிழில் வழங்க வேண்டும்.

* வழக்கு தொடர்பான வாதங்கள் தமிழில் இருந்தால் எளிதாக புரியும் வழங்க வேண்டும்.

* இந்த கோரிக்கை எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. தமிழ் மொழிக்கான சட்ட அங்கீகாரம் கேட்கும் கோரிக்கை.

* குடியரசுத் தலைவரும் மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் தர வேண்டும்.

* தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

* நீதிமன்றங்களில் தமிழ் மொழி பயன்பாட்டுக்கு சட்ட அங்கீகாரம்.

* மாநில மொழியை நீதிமன்றங்களில் பயன்படுத்த சட்ட வாய்ப்புள்ளது என்றார்.

முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெறுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com