பிரதமர் மோடியை விமான நிலையம் சென்று நேரில் வரவேற்ற முதலமைச்சர் விஜய்

பா.ஜ.க.வி னர் கட்சிக் கொடிகளுடன் திரண்டு நின்று பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.
pm modi, vijay
Published on: 
Summary

ஒருநாள் பயணமாக சென்னை வந்துள்ள பிரதமர் மோடியை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று வரவேற்றார்.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 4-வது வழித்தடத்தின் ஒரு பகுதியான பூந்தமல்லி-வடபழனி இடையிலான 14.64 கிலோமீட்டர் பணிகள் நிறைவடைந்துள்ளன. ரூ4,900 கோடி மதிப்பில் நிறைவடைந்த இந்தப் பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரெயில் சேவையை முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று வரவேற்றார். அப்போது அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

விமான நிலையத்தில் பிரதமர் மோடியை கவர்னர் அர்லேகர், தலைமை செயலாளர் சாய்குமார், போலீஸ் டி.ஜி.பி. மகேஷ்குமார் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.

விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் பிரதமர் மோடி காரில் போரூருக்குப் புறப்பட்டார். விமான நிலையம் முன்பிருந்து பரங்கிமலை ராணுவ பயிற்சி வளாகம் வரை அவர் ‘ரோடுஷோ’ சென்றார். அப்போது ரோட்டின் இருபுறமும் ஏராளமான பா.ஜ.க.வி னர் கட்சி கொடிகளுடன் திரண்டு நின்று பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். அவர்களை பார்த்து பிரதமர் மோடி உற்சாகமாக கை அசைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com