மீண்டும் இடம் மாறி அமர்ந்த முதலமைச்சர் விஜய் - அன்று செங்கோட்டையன், இன்று ஆதவ் அர்ஜூனா...

கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தொடரிலும் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அருகே அமர்ந்து விவாதத்தை கவனித்தார்.
மீண்டும் இடம் மாறி அமர்ந்த முதலமைச்சர் விஜய்
மீண்டும் இடம் மாறி அமர்ந்த முதலமைச்சர் விஜய்
Published on
Summary

முதலமைச்சர் விஜய் சக அமைச்சர்களுடன் இருக்கையில் அமர்ந்து சட்டசபை விவாதத்தை கவனிப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்து மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ஒரு மாத காலமாக நடைபெறும் கூட்டத்தொடரில் பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

வார விடுமுறைக்கு பின் கூடிய இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள், நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. மேலும் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இன்று சட்டசபையில் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது முதலமைச்சர் விஜய், முதலமைச்சருக்கான பிரத்யேக இருக்கையை தவிர்த்து அமைச்சர்களுடன் அமர்ந்து ஆலோசனை நடத்தி விவாதத்தை கவனித்தார். நீர்வளத்துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த்தின் இருக்கையில் அமர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் விவாதித்து சபை நடவடிக்கையை கவனித்தார்.

கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தொடரிலும் மானிய கோரிக்கை மீதான விவாத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அருகே அமர்ந்து முதலமைச்சர் விஜய் விவாதத்தை கவனித்தார்.

முதலமைச்சர் விஜய் சக அமைச்சர்களுடன் இருக்கையில் அமர்ந்து சட்டசபை விவாதத்தை கவனிப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com