

கோவையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
* பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்.
* ஒரு லிட்டர் பால் கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக ஏற்கனவே உயர்த்திய நிலையில் தற்போது மேலும் 3ரூபாய் உயர்த்தி அறிவித்துள்ளார்.
* பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் விலை ரூ.44 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் 3.15 லட்சத்துக்கம் அதிக பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர்.
* பால் கொள்முதல் விலையை உயர்த்தியதால் ஆவினுக்கு ஏற்படும் கூடுதல் செலவை அரசே ஏற்கும் என அறிவிப்பு.
* தூத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும்.
* தூத்துக்கடியில் புதிதாக இரண்டு நியூ தெர்மல் பவர் ஸ்டேஷன் அமைக்கப்படும்.
* புதிய அனல் மின், நீர்மின் நிலையங்கள் அமைக்க கடந்த ஆட்சியில் பெரிய அளவிலான நடவடிக்கை முன்னெடுக்கவில்லை.
* Super Critical Thermal Power Plant ரூ.20,800 கோடியில் நிறுவப்படும்.
* காஞ்சிபுரம் மதுரமங்கலத்தில் ரூ.175 கோடியில் சிப்காட் மூலம் செமி கண்டெக்டர் நிறுவனம் அமைக்கப்படும்.
* புதிய செமி கண்டக்டர் மூலம் புதிதாக 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
* தமிழ்நாட்டில் புதிதாக 196 துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும்.
* ரூ.1,762 கோடி மதிப்பிட்டில் மின் பகிர்மான மேம்பாடு திட்டம் செயல்படுத்தப்படும்.
* திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் Multi Model Logistics Hub அமைக்கப்படும்.
* கோவையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும்.
* திருச்சி மண்டலத்தில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் அமைக்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.