பட்டாசு விழுந்து வெடித்ததால் கார்-மோட்டார் சைக்கிள் எரிந்து சேதம்

கார், மற்றும் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தது.
பட்டாசு விழுந்து வெடித்ததால் கார்-மோட்டார் சைக்கிள் எரிந்து சேதம்
Published on: 
Summary

பட்டாசு விழுந்து வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

ஆதம்பாக்கம், கணேஷ் நகர், 2-வது தெருவில் உள்ள குடியிருப்பில் நேற்று இரவு 8.30 மணியளவில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார், மற்றும் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள்

வேளச்சேரி தீயணைப்பு அலுவலர் பிரபாகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார், மற்றும் மோட்டார் சைக்கிள் பலத்த சேதம் அடைந்தது. பட்டாசு விழுந்து வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

X