

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. அந்த கட்சி சந்தித்த முதல் இடைத்தேர்தலிலேயே முத்திரை பதித்துள்ளது.
2 தொகுதிகளிலும் திமுக இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.
இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவு குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர், ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், திமுகவைப் பொறுத்தவரை தோல்வியில் வெற்றி, தவெகவைப் பொறுத்தவரை வெற்றியிலும் தோல்வி என்று கூறினார்.