பா. ஜனதா இருளை விரட்டும் உதயசூரியன்: சட்டசபையில் முதலமைச்சருக்கு பரந்தாமன் எம்.எல்.ஏ. பாராட்டு

திராவிட மாடல் அரசு கொண்டு வந்த திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன.தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசால் தமிழ்நாட்டிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விடியல் ஏற்பட்டுவிட்டது.
பா. ஜனதா இருளை விரட்டும் உதயசூரியன்: சட்டசபையில் முதலமைச்சருக்கு பரந்தாமன் எம்.எல்.ஏ. பாராட்டு
Published on

சென்னை:

எழும்பூர் தொகுதி தி.மு.க. எம். எல். ஏ. இ.பரந்தாமன் சட்டசபையில் பேசுகையில், திராவிட மாடல் அரசு கொண்டு வந்த திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. மகளிருக்கான விடியல் பயணத்திட்டத்தை கர்நாடகா பின்பற்றுகிறது. காலை உணவு திட்டத்தை தெலுங்கானா பின்பற்றுகிறது. திராவிட மாடல் ஆட்சியின் மருத்துவ கட்டமைப்பை குஜராத் மாடல் ஆட்சி நடக்கும் மாநிலத்தவர் கூட இங்கு வந்து பார்த்துவிட்டு பாராட்டுகிறார்கள். நடைபெற இருக்கும் 5 மாநில தேர்தல் வாக்குறுதிகளும் கூட திராவிட மாடல் ஆட்சியின் நகல்களாக இருந்தால் அது ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசால் தமிழ்நாட்டிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விடியல் ஏற்பட்டுவிட்டது. இந்தியாவிற்கு அடுத்த ஆண்டு விடியல் ஏற்படும். அதுவும் முதலமைச்சர் பங்கேற்றுள்ள இந்தியா கூட்டணியினால் ஏற்படும். தமிழ்நாட்டிற்கு விடியலை தந்த உதயசூரியன் நம் தலைவர் ஆர்.எஸ்.எஸ்-பாஜக என்னும் இருளை விரட்டியடிப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com