நெல்லையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கைது - டிடிவி தினகரன் கண்டனம்

காவல்துறையை, அதிகார வர்க்கத்தின் ஏவல் கருவியாகப் பயன்படுத்துவதைத் தவெக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நெல்லையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கைது - டிடிவி தினகரன் கண்டனம்
Published on: 

தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கிச் சென்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்ப்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் கைது நடவடிக்கை

காத்திக்கை தீப திருநாளை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் நிபந்த்னையுடன் தீபமேற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவை அளித்திருந்தது.

தீபத் திருநாளை முன்னிட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறதா என்பதைப் பார்வையிட நயினார் நாகேந்திரன் புறப்பட்டுள்ளார்,.மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அமலில் உள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு காரணங்களுக்காகக் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்திருக்கும் காவல்துறையின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

கைது நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம்

ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரை, தவெக அரசும் அதன் காவல்துறையும் தீவிரவாதிகளைத் துரத்திச் செல்வதைப் போல அவரது வாகனத்தைப் பின்தொடர்ந்து, வழிமறித்துத் தடுத்து நிறுத்தி கைது செய்திருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகமாகும்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தவெக அரசின் பொய் பித்தலாட்டங்களை இன்று தோலுரித்துக் காட்டியுள்ள நிலையில், அதனைத் திசைதிருப்பும் நோக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிடுவதோடு சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையை, அதிகார வர்க்கத்தின் ஏவல் கருவியாகப் பயன்படுத்துவதைத் தவெக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

என்று தெரிவித்துள்ளார்

X