திருப்பரங்குன்றம் புறப்பட்ட நயினார்: நெல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது!

கோயிலின் அங்கீகரிக்கப்பட்ட நபர்களும், அரசு அதிகாரிகளும் மட்டுமே தீபம் ஏற்றுவதற்காக மலை உச்சிக்குச் செல்லலாம் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் புறப்பட்ட நயினார்: நெல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது!
Published on: 

திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள தூணில் கார்த்திகை தீபத்தை ஒட்டி, இன்று (நவ.24) ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயிலின் அங்கீகரிக்கப்பட்ட நபர்களும், அரசு அதிகாரிகளும் மட்டுமே தீபம் ஏற்றுவதற்காக மலை உச்சிக்குச் செல்லலாம் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே அசாம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்காக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி அமைப்பினர் பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் நிகழ்வுக்கு அவர் கட்சி நிர்வாகிகளுடன் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாகவே வீட்டின் முன்பு போலீசார் நிறுத்தப்பட்டதாகவும், ஆதரவாளர்களுடன் செல்ல முயன்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட நயினார் நாகேந்திரனை நெல்லையிலே நிறுத்தி போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதின்போது தான் மீனாட்சி அம்மன் கோயிலுக்கே செல்வதாகவும், திருப்பரங்குன்றம் செல்லவில்லை என்றும் நயினார் தெரிவித்தார்.

X