வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் அதிமுக கடும் போட்டியை கொடுக்கும்- எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியானது.
ADMK Office
Published on: 

இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடக்கம். அமைப்பு ரீதியாக உள்ள 84 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எஸ்.பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை. கட்சி வளர்ச்சி பணி, மாவட்ட செயலாளர்கள் செயல்பாடு, 2 தொகுதி இடைத்தேர்தல் தோல்வி, எதிர்வரும் 5 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

அப்போது இபிஎஸ் பேசியதாவது:-

விரைவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதால் அதற்கு பணியாற்ற மாவட்ட செயலாளர்கள் தயாராக இருக்க வேண்டும்.

வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் அதிமுக கடும் போட்டியை கொடுக்கும். எப்போது இடைத்தேர்தல் நடந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்.

புதிதாக மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தங்கள் பகுதிகளில் கட்சியை பலப்படுத்த வேண்டும்.

18 வயது பூர்த்தி அடைந்தவர்களை உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தவெக சென்றவர்களில் சிலர் மீண்டும் தாய் கழகத்திற்கு வருகிறோம். அதே பதவி கொடுங்கள் என கேட்கிறார்கள் என இபிஎஸ் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அதிமுகவில் சேர்த்து கொள்கிறோம் ஆனால் அதே பதவி வழங்க முடியாது. அதை பற்றி பிறகு பார்க்கலாம் என இபிஎஸ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியானது.

2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் மாற்றங்களை கொண்டுவர அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவிய நிலையில் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

X