தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு அதிமுக எதிர்ப்பு!

அதிமுகவின் நிலைப்பாட்டால், எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
Edappadi pazhanisamy
Published on

தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.

முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள்தொகை கட்டுப்பாட்டில் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறை விகிதாசாரம் குறையக்கூடாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

மக்கள்தொகை கட்டுப்பாட்டில் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறை விகிதாசாரம் குறையக்கூடாது.

விகிதாசாரம் பாதிக்கப்படாததை உறுதிசெய்யுமாறு மத்திய அமைச்சரிடம் அதிமுக வலியுறுத்தி உள்ளது.

அதிமுகவின் கோரிக்கையை ஏற்று உறுப்பினர் எண்ணிக்கை குறையாது என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். 7.18 விகிதாசாரம் குறையக்கூடாது என்ற அதிமுகவின் நிலைப்பாட்டால், எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழகத்திற்கான எம்பிக்கள் எண்ணிக்கை 39ல் இருந்து 59 ஆக உயர்வதற்கு தொகுதி மறுவரையறை வழிவகை செய்யும்.

அரசியல் காரணங்கள், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே தவெக அரசு தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

தொகுதி மறுவரையறை மசோதா பாதகமானதா? சாதகமானதா? என தெரியாத நிலையில் தனித்தீர்மானத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com