தமிழ்நாட்டின் நிலப்பரப்பை பெற்று தந்த எல்லை போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்: மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் எல்லைகள் மொழி அடிப்படையில் மறுசீரமைக்கப்பட்டு, மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டு 1956 நவம்பர் 1 மாநில மறுசீரமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.
MK Stalin
Published on: 
Summary

மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 1956 நவம்பர் 1 அன்று மாநில மறுசீரமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இன்று நாம் காணும் தமிழ்நாட்டின் நிலப்பரப்பை நமக்கு பெற்றுத் தந்த எல்லை போராட்ட தியாகிகள் நினைவு நாளில் அவர்களுக்கு என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.

"மாலவன் குன்றம் (திருப்பதி) போனால் என்ன, வேலவன் குன்றமாவது (திருத்தணி) எங்களுக்கு வேண்டும்" என முழக்கமிட்டுப் போராடியதால்தான் திருத்தணி, ஓசூர், கன்னியாகுமரி, செங்கோட்டை முதலிய பல ஊர்கள் இன்று நம்மிடம் உள்ளன.

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், மார்ஷல் நேசமணி, மங்கலங்கிழார், தாணுலிங்க நாடார், பொன்னப்ப நாடார், அப்துல் ரசாக் என எத்தனையோ தீரர்கள் முன்னின்று நடத்திய இப்போராட்டங்களில் தங்கள் இன்னுயிரையும் இழந்தவர்கள் பலர்.

எல்லைப் போராட்டத்தில் பங்கெடுத்துச் சிறையேகி, இப்போது வாழ்ந்து வரும் 110 தியாகிகளுக்கு 2021-ஆம் ஆண்டு நமது திராவிட மாடல் ஆட்சியில்தான் ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும் நினைவுப்பரிசும் வழங்கிப் போற்றினோம்.

தமிழ்நிலம் காத்த தியாகிகளுக்குத் தலைவணங்கி நன்றி செலுத்துவோம்!

இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X