இடி, மின்னல் பாதிப்புகளால் 14 பேர் உயிரிழப்பு-அமைச்சர் செங்கோட்டையன்

நீலகிரியில் உயிரிழந்த ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
Minister Sengottaian
Published on: 

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேடட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மண்சரிவில் சிக்கிய பேருந்தின் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். நடத்துநருக்கு கை முறிவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரியில் உயிரிழந்த ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

கூடுதலாக மழை பெய்த கோவை, திருப்பூர் பகுதிகளில் மழை நீர் அகற்றப்பட்டு இயல்பு நிலை திரும்பியது.

இடி, மின்னல் போன்ற பாதிப்புகளால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூரில் கனமழையால் தேங்கிய நீர் அதிகாலையில் அகற்றப்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் திடீரென கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாகையில் 3,500 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின, தொடர்ந்து கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com