வாக்கு விற்பனை வெற்றிகரமாக நடந்துள்ளது - தமிழிசை சவுந்தர்ராஜன் விமர்சனம்

ஆர்.கே நகர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், வாக்கு விற்பனை வெற்றிகரமாக நடந்துள்ளதை காட்டுகிறது என்று பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.
வாக்கு விற்பனை வெற்றிகரமாக நடந்துள்ளது - தமிழிசை சவுந்தர்ராஜன் விமர்சனம்
Published on

சென்னை:

சென்னை ஆர்.கே நகரில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரன் 10,421 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட கரு.நாகராஜன் 66 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 122 வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், பா.ஜ.க அதை விட குறைவான வாக்குகளே பெற்றுள்ளனர். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “வாக்கு விற்பனை வெற்றிகரமாக நடந்துள்ளதை காட்டுகிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com