ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் 68 இடங்களில் தி.மு.க. வெற்றி- தமிழக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

13 ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பதவி இடத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. 7 இடங்களிலும், அ.தி.மு.க. ஒரு இடத்திலும், பா.ம.க. ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழக தேர்தல் ஆணையம்
தமிழக தேர்தல் ஆணையம்
Published on

9 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் அனைத்து மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியிடத்திலும் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

74 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவி இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கான தலைவர் தேர்தல், தேர்தல் அறிவிப்பில் உள்ள குறைபாடு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

எஞ்சிய 73 பதவி இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. 68 இடங்களிலும், அ.தி.மு.க., ம.தி.மு.க. தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 3 பதவி இடங்களுக்கு குறைவெண் வரம்பின்மை காரணமாக தேர்தல் நடைபெறவில்லை.

அதே போன்று 74 ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பதவி இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கான துணைத் தலைவர் தேர்தல் அறிவிப்பில் உள்ள குறைபாடு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

எஞ்சிய 73 பதவி இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. 62 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், அ.தி.மு.க. ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். எஞ்சிய 3 பதவி இடங்களுக்கு குறைவெண் வரம்பின்மை காரணமாக தேர்தல் நடைபெறவில்லை.

மறைமுக தற்செயல் தேர்தல்களில் 6 ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவி இடத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. 4 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு பதவி இடத்திற்கு தேர்தல் நடைபெறவில்லை.

13 ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பதவி இடத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. 7 இடங்களிலும், அ.தி.மு.க. ஒரு இடத்திலும், பா.ம.க. ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். எஞ்சிய 3 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்... சென்னையில் இன்று மாலை பொருளாதாரம் குறித்து ப.சிதம்பரம் பேச்சு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com