ஜனாதிபதி வேட்பாளருக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்: பா.ஜ.க.வுக்கு சிவசேனா பரிந்துரை

ஜனாதிபதி தேர்தலில் பசுமை புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை பா.ஜ.க.வுக்கு பரிந்துரை செய்ய சிவசேனா திட்டமிட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளருக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்: பா.ஜ.க.வுக்கு சிவசேனா பரிந்துரை
Published on

புதுடெல்லி:

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வருகிற ஜூலை மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க ஜூலை 17-ந் தேதி தேர்தல் நடக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளரை தேர்ந்தெடுக்க அக்கட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். ஆனால், தனக்கு ஜனாதிபதி தேர்தலில் நிற்க விருப்பமில்லை என்று மோகன் பகவத் தெரிவித்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் மோகன் பகவத்தை பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தவில்லை என்றால், எம்.எஸ்.சுவாமி நாதன் பெயரை அமித்ஷாவுக்கு பரிந்துரை செய்ய உத்தவ் தாக்கரே திட்டமிட்டுள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியின் எம்.பி சஞ்சய் ராவுட் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்துத்துவா தலைவர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என்று சிவசேனா அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கட்டுரை வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com