பெரம்பலூர் மாவட்டத்தில் திருமாங்கல்யத்திற்கு 800 கிராம் தங்கம்: எம்.எல்.ஏ. ராமசந்திரன் வழங்கினார்

சமூக நலத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 115 பெண்களுக்கு ரூ.51.09 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை குன்னம் சட்டமன்ற உறுப்பினர் டி.ராமசந்திரன் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் திருமாங்கல்யத்திற்கு 800 கிராம் தங்கம்: எம்.எல்.ஏ. ராமசந்திரன் வழங்கினார்
Published on

பெரம்பலூர்:

படித்த ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமண உதவித்தொகையுடன் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.ராமசந்திரன் கலந்து கொண்டு பட்டப்படிப்பு படித்த 100 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் வீதம் 800 கிராம் எடையுள்ள தங்கத்ததையும், ரூ.50ஆயிரம் வீதம் ரூ. 50லட்சம் மதிப்பிலான உதவித்தொகைக்கான காசேலைகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார்.

அதனை தொடர்ந்து கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளி, விதவை பயனாளிகள் 15 நபர்களுக்கு தலா ரூ.7,290 வீதம் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 350 மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மனோகரன், மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்) பூங்கொடி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com