காங்கிரஸ் இல்லாமல் பா.ஜனதாவை வீழ்த்த முடியாது-நாராயணசாமி பேட்டி

புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் 2 நாள் பயிற்சி முகாம் தனியார் ஓட்டலில் நடந்தது.எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து சந்தித்தால், பா.ஜனதாவை வீழ்த்தலாம்.
காங்கிரஸ் இல்லாமல் பா.ஜனதாவை வீழ்த்த முடியாது-நாராயணசாமி பேட்டி
Published on

புதுச்சேரி:

புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் 2 நாள் பயிற்சி முகாம் தனியார் ஓட்டலில் நடந்தது.

இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சான்றிதழ் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் இல்லாமல் பா.ஜனதாவை வீழ்த்த முடியாது. எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து சந்தித்தால், பா.ஜனதாவை வீழ்த்தலாம். லோக்சபா தேர்தலில் புதுவையில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போது உண்மையான தொண்டர்கள்தான் காங்கிரசில் உள்ளனர். 2 ஆண்டாக மத்திய பா.ஜனதா அரசு, ஊழல் நிறைந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நாம் நடத்தி வரும் போராட்டங்களை மக்கள் பார்க்கின்றனர்.

காங்கிரஸ் ஆட்சி வந்தால் மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com