உலக அளவில் சவாலான சூழல் நிலவினாலும் விவசாயிகளுக்கே முன்னுரிமை- பிரதமர் மோடி உறுதி

நம் நாட்டின் விவசாயிகள், எப்போதும் எங்கள் அரசின் முன்னுரிமையாக இருந்து வருகின்றனர்.
PM Modi
Published on: 

2026-2027-ம் ஆண்டிற்கான குளிர்கால பருவ சாகுபடிக்கு தேவையான பாஸ்பரஸ், பொட்டாஷ் உரங்களுக்கான மானியத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

மத்திய அமைச்சரவையின் இந்த முடிவை வரவேற்று, பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

​இந்த குளிர்கால பருவ உர மானியத்திற்காக, சுமார் ரூ.62,370 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2025- 2026-ம் ஆண்டின் ரபி பருவ மானிய தொகையை விட, சுமார் ரூ.24,418 கோடி அதிகமாகும்.

நம் நாட்டின் விவசாயிகள், எப்போதும் எங்கள் அரசின் முன்னுரிமையாக இருந்து வருகின்றனர். உலக அளவில் சவாலான சூழல் நிலவி வரும் போதிலும், விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு எந்த குறையும் வைக்கவில்லை. இதன் ஒரு பகுதியாக 2026- 2027 குளிர்கால பருவத்திற்கான உரமானியத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் சர்வதேச சந்தையில் ஏற்படும் உர விலை உயர்வு, நமது விவசாயிகளை எந்த வகையிலும் பாதிக்காது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கு தடையின்றி நியாயமான, கட்டுப்படியான விலையில் உரங்கள் தொடர்ந்து கிடைக்கும். ​

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X