செய்தியாளர் சந்திப்புக்கு நோ சொன்ன இந்தியா... முதலில் ஓகே சொல்லி பின்னர் கதையை மாற்றிய ட்ரம்ப் - ஜி7 மாநாட்டில் நடந்த சம்பவம்!

பிரான்சில் ஜூன் 17ம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக செர்ஜியோ கோர் பேசியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்புக்கு நோ சொன்ன இந்தியா... முதலில் ஓகே சொல்லி பின்னர் கதையை மாற்றிய ட்ரம்ப் - ஜி7 மாநாட்டில் நடந்த சம்பவம்!
Published on

பிரான்சில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் ட்ரம்பின் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பை தவிர்க்குமாறு அமெரிக்காவை இந்தியா கேட்டுக்கொண்டதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் டொனால்ட் ட்ரம்ப் இந்த கோரிக்கைக்கு ஓகே சொல்லிவிட்டு பின்னர் கிட்டதட்ட 45 நிமிடங்கள் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கோரிக்கை

மோடி - டிரம்ப் சந்திப்பின் போது ஊடகங்களை அனுமதிக்கலாம், ஆனால் செய்தியாளர்கள் எவ்வித கேள்விகளும் கேட்கக் கூடாது என்ற நிபந்தனையை இந்தியா முன்வைத்துள்ளது.

முதலில் ஓகே சொல்லிய ட்ரம்ப்

டெல்லியில் நடைபெற்ற ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட செர்ஜியோ கோர் இதுதொடர்பாக பேசியதாவது;

“செய்தியாளர் சந்திப்புக்கு முன்பு நானும் (செர்ஜியா கோர்), அதிபர் ட்ரம்பும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் இந்தியா எதைப் பற்றி பேசப் போகிறார்கள் என என்னிடம் கேட்டார். நான் சில விவகாரங்கள் குறித்து அவரிடம் தெரிவித்தேன்.

அவர்களிடம் ஏதேனும் கோரிக்கைகள் உள்ளதா என்று அவர் கேட்டார். வெளியுறவு அமைச்சகம் மட்டும் ஒரு கோரிக்கையை வைத்துள்ளது. ‘ஊடகங்களை முழுமையாக அனுமதிப்போம். ஆனால் செய்தியாளர் சந்திப்பை நடத்தவேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டுள்ளனர் என தெரிவித்தேன்.

அதற்கு அவர் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களின் முன்னிலையில் இருதலைவர்களின் சந்திப்பும் தொடங்கியது. மோடியும், டிரம்ப்பும் ஒருவருக்கொருவர் எதிரெதிரே அமர்ந்து தங்களது தொடக்க உரைகளை ஆற்றினர்.

ஆனால் ட்ரம்பின் பேச்சு முடிந்த உடன் அவர் கேமராக்களை நோக்கித் திரும்பி, செய்தியாளர்களிடம், "ஏதேனும் கேள்விகள் உள்ளதா?" என்று கேட்டார். அதன் பிறகு அனைத்தும் சுலபமாகிவிட்டது. 45 நிமிட பத்திரிகையாளர் சந்திப்பில் எல்லாமே வெளிப்படையாகப் பேசப்பட்டன.” என தெரிவித்தார்.

இவரின் இந்த தகவல் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்தியா விளக்கம்

முக்கிய தலைவர்கள் சந்திக்கும் போது, அவர்களின் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை முன்கூட்டியே திட்டமிடுவது ஒரு சாதாரண தூதரக நடைமுறைதான் என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜி7 உச்சி மாநாடு

கிழக்கு பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக , ஜூன் 17 அன்று பிரதமர் மோடி, ட்ரம்பை சந்தித்தார். ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல் மீது அமெரிக்க கடற்படை நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து மோடி வலியுறுத்தினார். மேலும் இந்த சந்திப்பின் போதுதான் அதிபர் ட்ரம்ப், இந்தியா மீது யாரேனும் தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா நிச்சயம் வந்து நிற்கும். ஆனால் அப்போது மோடி பிரதமராக இருந்தால் மட்டுமே, வேறு யாராவது இருந்தால் எங்களுக்கு உறுதியாக தெரியாது என தெரிவித்திருந்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com