டெல்லியில் தொடர்ந்து பெய்தும் வரும் கனமழை காரணமாக தலைநகரின் முக்கிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையானது முடங்கியுள்ளது.
டெல்லியின் கிழக்கு மற்றும் வடகிழக்கும் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாயினர்.
குறிப்பாக ஆனந்த் விஹார் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது, இதனால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் பெய்து வரும் கனழையால் நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) டெல்லியின் அனைத்து மாவட்டங்களுக்கும் உடனடி 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மோசமான வானிலை மற்றும், தொடர் கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல விமானங்கள் மாற்றுப் பாதைகளுக்குத் திருப்பி விடப்பட்டும் , சில விமானங்கள் தாமதமாகவும் புறப்பட்டன.
பலத்த காற்றுடன் கூடிய கனமழை தொடரக்கூடும் என்பதால், பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் ,தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.