பார்த்திபன் மகள் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின்- வைகோ, ரஜினிகாந்த் சந்திப்பு

பார்த்திபன் மகள் திருமண விழாவில் ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோர் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி நலம் விசாரித்து மகிழ்ந்தனர்.
பார்த்திபன் மகள் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின்- வைகோ, ரஜினிகாந்த் சந்திப்பு
Published on

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன்-சீதா தம்பதியின் இளைய மகள் கீர்த்தனா-அக்‌ஷய் திருமணம் நேற்று நடந்தது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பெற்றோர் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம். பார்த்திபனும், சீதாவும் ஏற்கனவே பிரிந்து விட்டார்கள்.

என்றாலும், மகள் திருமணம் என்பதால் இருவரும் வேறுபாடுகாட்டாமல் ஒன்றாக இருந்து இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். இது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது.

மணமக்களை வாழ்த்துவதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்த போது, ரஜினிகாந்தும் வந்தார். அப்போது இருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர்.

இதுபோல் வைகோவும் ரஜினியும் கட்டித் தழுவி நலம் விசாரித்தனர். 3 பேரும் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.


ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதை பெரும்பாலான அரசியல்வாதிகள் விமர்சனம் செய்து வருகிறார்கள். காகிதப்பூ மணக்காது என்று மு.க.ஸ்டாலினும் விமர்சித்து இருக்கிறார். இப்போது நேர்மையான அரசியல்வாதிகள் இல்லை. அதனால்தான் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினி கூறி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com