ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை இப்போது வெளியிட்டது கீழ்த்தரமான அரசியல்: மு.க ஸ்டாலின்

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியானது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின், தற்போது வீடியோ வெளியிட்டது கீழ்த்தரமான அரசியல் என்று விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை இப்போது வெளியிட்டது கீழ்த்தரமான அரசியல்: மு.க ஸ்டாலின்
Published on

சென்னை:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ ஒன்றை டி.டி.வி தினகரன் ஆதரவாளரும், முன்னாள் சட்ட சபை உறுப்பினருமான வெற்றிவேல் இன்று வெளியிட்டார். அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வீடியோவை ஒளிபரப்ப வேண்டாம் என தேர்தல் ஆணையம் ஊடகங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின், “அரசியலுக்காக கீழ்த்தரமாக ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை இப்போது வெளியிட்டுள்ளனர். ஜெயலலிதா சிகிச்சை வீடியோ ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது ஐ.பி.சி பிரிவு 188ன் கீழ் அரசு உத்தரவை மீறியது மற்றும் பிரிவு 126 (பி)ன் கீழ் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com