நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
Published on

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியை மாற்றி விட்டு அவருக்கு பதில் புதிய முதல்-அமைச்சரை தேர்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊழலுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கூறி வரும் பிரதமர் மோடி, இன்று 2 ஊழல் அணிகளையும் இணைத்துள்ளார். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் மனு அளித்துள்ளனர். அதில் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி உள்ளனர்.


எனவே கவர்னர் இந்த வி‌ஷயத்தில் தலையிட்டு எடப்பாடி பழனிசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். அதற்காக சட்டசபையை கூட்டுவதற்கும் உத்தரவிட வேண்டும்.

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டால் அப்போது அதுபற்றி கலந்து ஆலோசித்து தி.மு.க. உரிய முடிவை எடுக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com