பிறந்தநாளன்று வாழ்த்து சொல்ல வர வேண்டாம்- திமுகவினருக்கு முக ஸ்டாலின் வேண்டுகோள்

மார்ச் 1-ந்தேதி எனது பிறந்தநாளன்று நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல வர வேண்டாம் என்று திமுகவினருக்கு முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
Published on

சென்னை:

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (98). உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த 24-ந்தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மார்ச் 1-ந்தேதி எனது பிறந்தநாளன்று நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல வர வேண்டாம்.  திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் வயது முதிர்வின் காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலிவுற்றிருக்கும் சூழலில் பிறந்தநாளை கொண்டாடும் மனநிலையில் இல்லை. 

தமிழர் நலனுக்காக ஒப்படைத்துக் கொண்ட பேராசிரியர் நலம்பெற நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com