அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன் என்று மு.க.ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.
அமைச்சர் கேபி அன்பழகன்- மு.க.ஸ்டாலின்
அமைச்சர் கேபி அன்பழகன்- மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து முதலமைச்சர், அமைச்சர்கள் இல்லம் அமைந்துள்ள சென்னை கிரீன்வேஸ் பகுதியில் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது

இந்த நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன் என்று மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்களிடம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன்.

அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற வரவேண்டும்; பொது வாழ்வில் இருப்பவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

இவ்வாறு மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com