நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்திக்க தயார்: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

அ.தி.மு.க. அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயார் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்திக்க தயார்: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி
Published on

சென்னை இன்று நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மு.க. ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், “முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்” என்று கூறினார்.

அதற்கு பதில் அளித்து அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலின் எட்டாக்கனிக்கு கொட்டாவி விடுபவர். அ.தி.மு.க. அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com