மத்திய அரசு திட்டங்களின் பலன்கள் காஷ்மீர் மக்களுக்கு கிடைக்கும் - மாயாவதி

மத்திய அரசு திட்டங்களின் உண்மையான பலன்கள், இனிமேல் காஷ்மீர் மக்களுக்கு கிடைக்கும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
மாயாவதி
மாயாவதி
Published on

லக்னோ:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியதாவது:-

அரசியல் சட்டத்தின் 370, 35ஏ பிரிவுகள் நீக்கப்பட வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை நிறைவேறி உள்ளது. இனிமேல், மத்திய அரசு திட்டங்களின் உண்மையான பலன்கள், காஷ்மீர் மக்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம். லடாக்கை யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்ற புத்த மதத்தினரின் கோரிக்கையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் அம்பேத்கரின் புத்தமத ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com