எம்பி வசந்தகுமாருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை- கேஎஸ் அழகிரி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்பி வசந்தகுமாருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
கேஎஸ் அழகிரி
கேஎஸ் அழகிரி
Published on

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி எம்பி வசந்தகுமாருக்கு தற்போது வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எம்பி வசந்தகுமார் விரைவில் மீண்டு வர வேண்டும் என விரும்புகிறேன். 

தமிழகத்தில் காங்கிரஸ் தேர்தல் பரப்புரை ஆக 20ஆம் தேதி முதல் தொடங்குகிறது. காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்தல் பரப்புரை திருப்பூரில் தொடங்க உள்ளது. வாரம் 3 சட்டமன்ற தொகுதிகளில் தோழமை கட்சிகளுடன் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளோம். 

கொரோனாவை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com