தமிழகத்தின் தந்தை போன்று விளங்கியவர் கருணாநிதி: மம்தா பானர்ஜி புகழாரம்

தமிழகத்தின் தந்தை போன்று விளங்கியவர் கருணாநிதி என்று ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மம்தா புகழாரம் சூட்டியுள்ளார்.
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
Published on

பின்னர் சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கூட்டம் நடைபெற்றது. அதில் மம்தா பானர்ஜி கருணாநிதி நினைவு விழாவில் 'அனைவருக்கும் வணக்கம்' என தமிழில் பேச்சை தொடங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் ‘‘தமிழகத்தின் தந்தை போன்று விளங்கியவர் கருணாநிதி. அவர் மறைந்தாலும் இன்றும் நம் இதயங்களில் வாழ்கிறார்.  எப்போதும் கூட்டாட்சி தத்துவத்திற்கு குரல் கொடுத்தவர். அவரை யாரும் மறந்துவிட முடியாது, காரணம் அவரது செயல்பாடுகள். கருணாநிதியின் வழியில் நின்று நாட்டில் நிலவும் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்.

எந்த முடிவெடுத்தாலும் மாநில மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். தமிழக மக்களை எனக்கு மிகவும் பிடிக்கும், மாநில உரிமையை விட்டுக் கொடுக்காத மக்கள் . தமிழ் மக்கள் எப்போதும் தைரியமானவர்கள். அடுத்தமுறை தமிழகம் வரும்போது நான் தமிழை கற்றுக்கொள்கிறேன். நானும் இந்தியர் தான், ஸ்டாலினும் இந்தியர் தான், அதனால் எங்களுடைய தனிப்பட்ட உரிமைகளை விட்டுத்தர முடியாது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com