ஜி.எஸ்.டி. வரியில் மாற்றமா?: நிதி மந்திரி அருண்ஜெட்லி இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார்

நாடு முழுவதும் ஜி.எஸ்.டி.க்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் நிதி மந்திரி அருண்ஜெட்லி இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார்.
ஜி.எஸ்.டி. வரியில் மாற்றமா?: நிதி மந்திரி அருண்ஜெட்லி இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார்
Published on

புதுடெல்லி:

நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதற்கு நிறுவனங்கள், வர்த்தகர்கள், சிறு வியாபாரிகள் என அனைத்து பிரிவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஜி.எஸ்.டி.யை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றன.

நாடு முழுவதும் ஜி.எஸ்.டி.க்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் நிதி மந்திரி அருண்ஜெட்லி இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார். ஜி.எஸ்.டி. வரியில் மாற்றங்கள் இருக்குமா? என்பது குறித்து அவர் முக்கிய தகவலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com